|
ஆன்-லைன் விளம்பர பிசினஸ் சூடுபிடிப்பு |
|
செப்டம்பர் 16,2008,00:00 IST |
|
||
Part time/Full time home based typing jobs available. No experience needed. No Selling Required. Paid for the work you do. Get paid everymonth.The more you work, the more you earn. For details please visit the website: http://www. selvam .cashinfinite.com
கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = ‘தனம்’- தமிழ் சினிமாவின் துணிச்சல்
வே.மதிமாறன்
நாடகம், சினிமாவில் – கலைவடிவம் என்ற பேரில் பார்ப்பனிய – இந்து மதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இதுபோதாதற்கு காங்கிரஸ் சார்பு கலைஞர்கள் ‘சுதந்திர போராட்ட நடவடிக்கைகள்‘ என்கிற கவுரமான பெயரில் பார்ப்பனிய, இந்து மத பிரச்சாரங்களுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும், தங்கள் ‘கலை சேவை‘யை செய்து கொண்டிருந்தார்கள். இப்படியாக, தமிழ்நாடெங்கும் ஒரே பஜனை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், நடிகவேள் எம்.ஆர். ராதா தமிழக நாடக மேடையெங்கும் சமரசமே இல்லாமல் பெரியாரின் ஒற்றைப் போர்வாளாக சுழன்று கொண்டிருந்தார். ஆனால் திரைத்துறையில் இந்த எதிர்ப்புக் குரல் மிக காலதாமதமாகத்தான் ஒலித்தது.
தான் சார்ந்திருக்கிற இயக்கத்தின் கருத்துகளை அதுவும் பெருவாரியான மக்கள் விரும்பிப் பார்க்கிற ஓர் ஊடகத்தில், (மூடநம்பிக்கையில் ஊறிய முதலாளியின் பணத்தில்) அவர்கள் ஒத்துக் கொள்ளாத, ஆனால் அவர்களுக்குத் தேவையான கருத்துகளைச் சொல்வது முடியாத காரியம் என்கிற மூடநம்பிக்கையைத் தகர்த்து, பகுத்தறிவாளர்களுக்கு திரைத்துறையில் வழி அமைத்துக் கொடுத்த படம் கலைஞரின் ‘பராசக்தி’.
தமிழ், தமிழன், பகுத்தறிவு என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இறைநம்பிக்கையை கேள்வி கேட்டும் உருவான இந்தப் படம், பார்ப்பனியத்தைக் கேள்வி கேட்கத் தயங்கியது. அதனால்தான், “ஏய் குருக்கள், அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரைப் பார்த்து கேட்க வேண்டிய வசனம், “ஏய் பூசாரி, அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரல்லாத பூசாரியைப் பார்த்து சீறியது.
அன்றைய சூழலில் இந்தக் கேள்வியே பெரிய விஷயம். இருந்தாலும், இப்படி ‘சுதி’ குறைந்து ஒலித்ததற்கு சென்சார் போர்டு மட்டுமல்ல, பெரியாரிடம் இருந்து திமுக கொள்கையளவில் வேறுபாடுகள் கொண்டிருந்ததும் காரணம்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்கிற காங்கிரஸ்காரர் எழுதிய ‘மலைக்கள்ளன்‘ என்கிற நாவல், திரைவடிவமாக மாறியபோது, அதற்கு வசனம் எழுதிய கலைஞர் மு. கருணாநிதி, தனது சாமார்த்தியத்தால், மலைக்கள்ளனை பகுத்தறிவு வசனங்களோடு, காங்கிரஸ் எதிர்ப்புப் படமாகவும், திமுகவின் பிரச்சார படமாகவும் மாற்றினார். போதாகுறைக்கு, ‘இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்று காங்கிரசை விமர்சிக்கிற பாடலும், அந்தப் பாடலின் இடையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ‘தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்’ என்று திமுகவின் பிரச்சாரமும் ஓங்கி ஒலித்தது.
தனது திறமையால் காங்கிரஸ் கம்பத்தில், திமுக கொடியை ஏற்றினார் கலைஞர். ஆனாலும் அந்தப் படத்திலும் பார்ப்பன எதிர்ப்பு இல்லை. நடிகவேள் எம்.ஆர். ராதா நடித்து திருவாரூர் தங்கராசு வசனத்தில் வெளிவந்த ‘ரத்தக்கண்ணீர்‘ திரைப்படம், இந்து நம்பிக்கையை தீவிரமாக கேள்வி கேட்டது, ஆனாலும் அந்தப் படத்திலும் பார்ப்பன எதிர்ப்பு இல்லை. அதன் பிறகு பல படங்கள், பகுத்தறிவு ‘டச்சோடு’ வந்திருந்தாலும், பார்ப்பன எதிர்ப்பு என்கிற எல்லைக்கு அவைகள் செல்லவே இல்லை. பார்ப்பன கதாபாத்திரம் கெடுதல் செய்வதாக காட்டுகிற துணிச்சல்கூட, திராவிட இயக்க அரசியல் ரீதியாக இருந்த யாருக்கும் வரவில்லை.
பெரியார் கருத்துகளிலோ, திராவிட இயக்க சிந்தனைகளிலோ எந்த ஈடுபாடும் இல்லாத இறை நம்பிக்கையாளரான பாரதிராஜாதான் முதன் முதலில் ஒரு பார்ப்பன கதாபாத்திரம் கெடுதல் செய்வதாகக் காட்டியிருந்தார். பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில், பார்ப்பனராக வரும் ஜனகராஜ், ‘ஊரில் மழை நிற்க வேண்டும் என்றால், ஒரு பெண் நிர்வாணமாக ஊரை சுற்றி வரவேண்டும்’ என்ற யோசனையைத் தந்து, ராதிகாவை அதில் சிக்கவைப்பார். அதேபோல் அவரின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தில், கதாநாயகன் கொலைகாரனாக மாறியதற்கு ஒரு பார்ப்பன குடும்பம்தான் காரணம் என்று சொல்லியிருப்பார்.
அவருக்குள் சுழன்று கொண்டிருந்த பார்ப்பன எதிர்ப்பு என்ற உணர்வு, பின்நாட்களில் ‘வேதம் புதிதாக’ வெளிப்பட்டது. பாரதிராஜாவின் பார்ப்பன எதிர்ப்பு, சரியான அரசியல் காரணங்களால் வடிவம் பெறாததால், சாதி ஒழிப்பை நோக்கி நகர வேண்டிய பார்ப்பன எதிர்ப்பு, ‘சுயஜாதி பிரியம்’ என்கிற சகதியில் சிக்கிக் கொண்டது.
பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்க வந்த வேதம் புதிது, பார்ப்பனியத்தின் இன்னொரு வடிவமான சுயஜாதி அபிமானத்தை சுற்றி வந்து மீண்டும் பார்ப்பனியத்திடமே சரணடைந்தது. அதனால்தான் வயது முதிர்ந்த அந்த பாலு தேவர், பார்ப்பன சிறுவன் முன் பரிதாபமாக கை கட்டி நின்றார். ‘தேவர் ஜாதி’ என்கிற இடை நிலை ஜாதி நிலையில் இருந்து பார்ப்பனியத்தை அணுகி இருந்தார் பாரதிராஜா. அதனால் அவரால் ஜாதி ஒழிப்பு என்கிற அடுத்த நிலைக்கு நகர முடியவில்லை. ஆனால் இதே கருத்தை உள்ளடக்கமாகக் கொண்டு வந்தது பாக்கியராஜின் ‘இது நம்ம ஆளு‘ வேதம் புதிதைவிட ஒரு படி மேலே போய் பார்ப்பனியத்தை, ஒரு நாவிதரின் நிலையில் இருந்து அதுவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நாவிதர் நிலையில் இருந்து அணுகி இருந்தார் பாக்கியராஜ்.
தொழிலில் நேர்மையாக நடந்து கொள்பவர்கள் பிற்போக்காளர்களாக இருந்தாலும், தன்னுடைய சுயவிருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரமாட்டார்கள். பாக்கியராஜும் அந்த நிலையில் இருந்துதான், தன்னுடைய திரைக்கதை யுக்தியாக ஜாதியை இரண்டு ‘எக்ஸ்டீரீம்’ நிலையில் அணுகியிருந்தார்.
பார்ப்பனராக வரும் சோமையாஜுலு, மிகவும் நல்ல மனிதர். இரக்கமானவர்தான், ஆனால் பார்ப்பன ஆச்சாரத்தை (பார்ப்பனியத்தையும், தீண்டாமையையும் கடைப்பிடிப்பது) காப்பதில் மிகத் தீவிரமானவர் என்பதைக் காட்டுவதற்காக இது நம்ம ஆளு படத்தில் இப்படி ஒரு காட்சி அமைந்திருக்கும்:
தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் எரிந்து அவர்கள் நிர்க்கதியாகி வந்து, “சாமி நீங்கதான் சாமி எங்களுக்கு வழிகாட்டணும்.” என்று சோமையாஜுலுவிடம் கதறுவார்கள். அவர்களுக்கு உணவு, உடை, பணம் கொடுத்து உதவுவார் சோமையாஜுலு. அப்போது அவர் மேல் இருந்த துண்டு காற்றில் பறந்து போய் கீழே விழுந்துவிடும். அதை ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் கையில் எடுத்து சோமையாஜுலுவிடம் தருவான். அந்தக் குழந்தை தொட்ட துணி தீட்டாகி விட்டது என்பதற்காக அதை வாங்க மறுத்து கோபமாக சென்றுவிடுவார் சோமையாஜுலு.
இந்தக் காட்சியை பார்ப்பன எதிர்ப்புக்காக பாக்கியராஜ் பயன்படுத்தவில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்கிற அரசியல் உணர்வு பாக்கியராஜுக்கு இருக்கவும் வாய்ப்பில்லை. சோமையாஜுலு காதாபாத்திரத்தை பார்வையாளர்கள் புரிந்து கொள்வதற்கான காட்சியாகவும், இப்படிப்பட்டவரின் பெண்ணைத்தான் ஒரு நாவிதர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார், என்ன ஆகுமோ என்கிற ‘திகிலை‘ பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தவே இதை அமைத்திருந்தார். இதுபோன்ற தற்செயல் காட்சியாக பார்ப்பன எதிர்ப்பு என்கிற காட்சியமைப்புகள், அந்த அரசியலில் நம்பிக்கையில்லாதவர்களால்தான் தமிழ் சினிமாவில் காட்டப்பட்டிருக்கிறது.
பெரியாரின் கருத்துகளில் தீவிர ஈடூபாடு கொண்ட, சத்யராஜ் இயக்கி நடித்த ஒரே படமான ‘வில்லாதி வில்லன்’ திரைப்படத்தில் கூட பார்ப்பன உயர்வையும், இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான வசனமுமே இடம் பெற்றிருந்தது. பார்ப்பன எதிர்ப்பிற்காகவே கட்சி நடத்துகிற ‘திராவிடர் கழகம்’ எடுத்த திரைப்படங்களில் தற்செயலாகக் கூட பார்ப்பன எதிர்ப்பு வந்து விடக்கூடாது என்று கவனமாக படம் எடுத்திருந்தார்கள். ‘பெரியார்’ படமே அப்படி ஒரு பரிதாபமான நிலையில்தான் இருந்தது. வேலுபிரபாகரனை வைத்து அவர்கள் எடுத்த ‘புரட்சிக்காரன்’ படத்தில் பார்ப்பனர்தான் கதாநாயகன். வில்லன் முஸ்லீம். (பேலன்ஸ் பண்ணறாங்கலாமா!) பெரியாரின் பேரனைப் போல் பேசுகிற வேலுபிரபாகரன், பார்ப்பன எதிர்ப்பை தன் படங்களில் காட்டியதே இல்லை.
தமிழ் சினிமாவில் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ, ஆதரவாளர்களோ எடுக்கத் துணியாத பார்ப்பன எதிர்ப்பு, அதற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத யாரோ ஒரு இறைநம்பிக்கையாளரால் திரைக்கதை யுக்திக்காக ‘தனம்’ என்கிற திரைப்படத்தில் மீண்டும் காட்டப்பட்டிருக்கிறது,.
இந்தப் படத்தின் சிறப்பு, இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிக்காத அளவிற்கு பார்ப்பன எதிர்ப்பு அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. ‘பார்ப்பனியம், தனக்கு லாபம் என்றால் அது தன் ஆச்சாரத்தைக் கைவிட்டுவிடும். தனக்கு நஷ்டம் என்றால், தன் ஆச்சாரத்தின் பெயரில் கொலை செய்யக் கூட தயங்காது‘, என்பதை இந்திய வரலாறு தெரிவித்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் உள்ளடக்கமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் இந்த வரலாறுகளை எல்லாம் தெரிந்தும், அப்படி ஒரு அரசியல் நிலையில் இருந்தும் இந்தப் படத்தை இயக்கி இருக்க வாய்ப்பில்லை. இருந்தும் தமிழ் சினிமாவில் இவ்வளவு துணிச்சலாக இதுவரை யாரும் பார்ப்பனியத்தை அதன் பூணூலோடு சேர்த்துப் பிடித்து இழுத்து கேள்வி கேட்டதில்லை. இந்தப் படம் கேட்டிருக்கிறது.
விபச்சாரியை, ஒரு இளைஞன் காதலிக்கிறான். “உன் பெற்றோர் சம்மதித்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று அந்தப் பெண் சொல்கிறாள். பிறகு அந்தப் பெண்ணை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இதை ஒரு சாதரணப் பார்ப்பனரல்லாத நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் சொன்னால், வெறுமனே ‘ஒழுக்கம்’ என்கிற அளவுகோலில் மட்டும்தான் கதை சுற்றி வந்திருக்கும்.
பூஜை, புனஸ்காரம், ஆச்சாரம், அனுஷ்டானம் என்றும், தன்னை போன்ற உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத குடும்பத்தரோடு நெருக்கமாக பழுகுவதையே ஆச்சாரக் கேடு என்றும் நினைக்கிற ஒரு பார்ப்பன குடும்பத்திற்குள், விபச்சாரி மருமகளாக போனால் என்ன ஆகும்? என்று கதையை விறுவிறுப்பாக சொல்வதற்கு ஒரு களமாகத்தான் பார்ப்பனக் குடும்பத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.
அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், சேதுமாதவன் போன்ற ‘அவார்டு’ இயக்குநர்கள் பார்ப்பனக் குடும்ப சூழலில் பார்ப்பனிய மேன்மையோடு ஒரு கதையை சொல்வதின் மூலம், கூடுதல் கலை தன்மையும் – இந்திய அடையாளமும் தெரியும், அங்கீகாரமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் படம் எடுத்த முறையையே திருப்பிப் போட்டு படம் எடுத்திருக்கிறார், தனம் படத்தின் இயக்குனர் ஜீ. சிவா. ஆனால் அவர்களின் படம் போல் ‘ஜவ்வாக’ இல்லாமல் விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார். திரைக்கதையிலும், வசனத்திலும், காட்சி அமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்தியாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய வெற்றி படமாகவும் இது அமைந்திருக்கும். ஆனாலும் வந்த வரை பழுதில்லை.
துணிச்சலாக இப்படி ஒரு படம் எடுத்த இயக்குநர் ஜீ. சிவா அவர்களுக்கு வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு, தமிழர்கள் இந்தப் படத்தை குடும்பம், குடும்பமாக சென்று பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு:
‘தனம்’ படத்தின் கதையை ழுழுவதுமாக சொல்லி அதை தனித் தனியாகப் பிரித்து, விமர்சிக்க விரும்பவில்லை. இந்த விமர்சனமே, இந்தப் படத்தை பார்ப்பதற்கான பரிந்துரைதான். ஒரு பார்ப்பனர் – விபச்சாரியிடம் செல்ல, பிச்சை எடுத்துப் பணம் சேர்க்கிறார் என்று காட்டுவதற்காக, ‘பிச்சைக்காரர்கள் பொருளாதார ரீதியாக உயர்வாக இருக்கீறார்கள்’, என்ற வழக்கமான தமிழ் சினிமாவின் காமெடிக்காக, அவர்களை இழிவுப்படுத்திக் காட்டியதை தவிர்த்திருக்கலாம்.
- வே.மதிமாறன் (askmathi@gmail.com)
Thanks to Keetru.
பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்…
ஓர் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 2 ஆயிரம் டன் பாதரசம் உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் இன்று பயன்படுத்தப்படும் வெவ்வேறு விதமான 3 ஆயிரத்தும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க பாதரசம் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. ஆனால் பாதரசம் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச் சூழலில் மட்டுமல்ல, உடல் நலனிலும் தலைமுறை தலைமுறையாய் தொடர்பவை ஆகும் என்பது வேதனைக்குரிய உண்மை ஆகும்.
நீர்ம நிலையில் உள்ள ஒரே கன உலோகம் பாதரசம் ஆகும். பாதரசம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது. இது பளுமானி, அழுத்தமானி, தெர்மாமீட்டர் ஆகியவற்றால் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி மருந்துகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பல்புகள் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
பாதரசம் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் குளோரைடு கரைசலுடன் பொட்டாசியம் அயோடைடை சேர்க்க மெர்க்குரிக் அயோடைடு உருவாகின்றன.
பாதரசம் புற ஊதாக்கதிரின் மூலமாக செயல்படுகின்றது. பாதரச ஆவி விளக்கின் குமிழில் உள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீல நிற ஓளியைத் தருகின்றது. இந்த விளக்கு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகின்றது. மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. எனினும் பாதரசம் விஷத்தன்மை மிக்கது. பாதரசத்தால் தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன.
பாதரசம் போன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள் நன்மையும் தீமையையும் கொண்டுள்ளன என்பதில் விஞ்ஞான உலகம் குழம்பிப் போய் உள்ளது.
எச்சரிக்கை! செல்பேசி
- முல்லைத் தமிழ்
இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 – ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.
இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.
இதுபோலவே செல்பேசி “டவர்களும்” மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.
சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.
செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த “ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு” செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.
அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.
அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.
இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் – மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :
பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.
அமெரிக்கா: இந்திய மாணவி-வாலிபர் மர்ம சாவு
புதன்கிழமை, செப்டம்பர் 17, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
மேலும் படங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவியும் அவரது உறவினரான வாலிபரும் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இது கொலை-தற்கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள முனியால் என்ற கிராமத்தைச் சேர்ந்த செளம்யா ரெட்டி (23) சிகாகோவில் உள்ள தெற்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் எலெக்ட்ரானிக்ஸ் படித்து வந்தார்.
இவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகோகாவி்ன் ஸ்பானிஷ் ஏரிக் கரையில் ஒரு காரில் கிடந்தது. அவரை யாரோ சுட்டுக் கொன்றுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கார் செளம்யாவின் பெரியப்பா மகனான விக்ரம் குமார் ரெட்டி (27) என்பவருக்கு சொந்தமானது.
விக்ரமும் சுட்டுக் கொலை:
இந் நிலையில், செளம்யாவின் கொலை நடந்த 3 நாட்களில் சிகாகோவின் ஏரிக் கரையில் இருந்து விக்ரம் குமார் ரெட்டியின் உடல் இன்று குண்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
இவர் சிகாகோவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரும் செளம்யாவும் மேரிவில்லே பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது கொலை-தற்கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 5 பேர் ஆந்திராவையும் ஒருவர் ஜார்க்கண்டையும் சேர்ந்தவர்கள் ஆவ
விவசாயி வீட்டில் அத்துமீறி நுழைந்த சென்னை இன்ஸ்பெக்டருக்கு சிறை
செப்டம்பர் 18,2008,00:00 IST
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே விவசாயி வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டருக்கு, நான்கு மாத சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஈசாக். 1999ம் ஆண்டு அவரது காட்டிலிருந்த உடைமரத்தை வெட்டி கடத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொன்னையா, பாலு கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம் கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கிலிருந்து பொன்னையா, பாலுவை விடுவித்து 2002ம் ஆண்டு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பாக தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து ரூ. பத்தாயிரத்தை எடுத்துச் சென்றதாக அப்போதைய சாத்தான்குளம் எஸ்.ஐ., குமரகுருபரன் மீது பொன்னையா, மதுரை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். ஐகோர்ட் உத்தரவுப்படி அவ்வழக்கை சாத்தான்குளம் கோர்ட் விசாரித்தது.பொன்னையா வீட்டில் அத்துமீறி நுழைந்த குமரகுருபரனுக்கு, நான்கு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜோசப்ஜாய் தீர்ப்பளித்தார். குமரகுருபரன் தற்போது சென்னை மாநகர லஞ்சஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
விவசாயி வீட்டில் அத்துமீறி நுழைந்த சென்னை இன்ஸ்பெக்டருக்கு சிறை
செப்டம்பர் 18,2008,00:00 IST
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே விவசாயி வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டருக்கு, நான்கு மாத சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஈசாக். 1999ம் ஆண்டு அவரது காட்டிலிருந்த உடைமரத்தை வெட்டி கடத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொன்னையா, பாலு கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம் கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கிலிருந்து பொன்னையா, பாலுவை விடுவித்து 2002ம் ஆண்டு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பாக தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து ரூ. பத்தாயிரத்தை எடுத்துச் சென்றதாக அப்போதைய சாத்தான்குளம் எஸ்.ஐ., குமரகுருபரன் மீது பொன்னையா, மதுரை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். ஐகோர்ட் உத்தரவுப்படி அவ்வழக்கை சாத்தான்குளம் கோர்ட் விசாரித்தது.பொன்னையா வீட்டில் அத்துமீறி நுழைந்த குமரகுருபரனுக்கு, நான்கு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜோசப்ஜாய் தீர்ப்பளித்தார். குமரகுருபரன் தற்போது சென்னை மாநகர லஞ்சஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
Posted by: selvaminfo on: September 18, 2008
டீ கடை பெஞ்ச்
செப்டம்பர் 18,2008,00:00 IST
ஓட்டம் பிடித்த நகராட்சி அதிகாரிகள் : “”எங்க நடிப்புக்கு நல்ல பலன் கிடைச்சுதுன்னு சந்தோஷப்படுறாங்க பா…” என ஆரம்பித்தார் அன்வர்பாய். “”எந்த நடிகருங்க…” என அப்பாவியாகக் கேட்டார் அந்தோணிசாமி. “”நடிகர் இல்லை பா… சி.பி.சி.ஐ.டி., போலீஸ்காரங்க… எம்.ஜி.ஆர்., உறவினர் கொலை வழக்குல, விஜயனோட மச்சினி பானு கைதானாங்கல்ல பா… சனிக்கிழமை கூட பேசிட்டிருந்தோமே… அந்தம்மா கைதுக்கு காரணமே, டி.எஸ்.பி., சுப்புலட்சுமி தானாம் பா…
“”அவங்களைத் தான் பானுட்ட நட்பா பேச்சு கொடுக்கச் சொல்லி, உண்மையெல்லாம் வரவழைச்சாங்களாம்… அதன் அடிப்படையில தான் ஏராளமான துப்பு கிடைச்சதாம்… அதுக்காக பேசினதால தான், பானு மொபைல்ல சுப்புலட்சுமி நம்பர் இருந்ததாம் பா… உயரதிகாரிகளே சொல்றாங்க…” என அந்த மேட்டரை முடித்தார் அன்வர்பாய்.
“”போட்டோ எடுக்க வந்ததால, சிவகாசி நகராட்சி அதிகாரிகள் பயத்துல இருக்காங்க…” என அடுத்த விவகாரத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“”பலான படம் ஏதாச்சும் எடுத்துட்டாங்களா வே…” எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“”சிவகாசியில செயல்படும் வட்டார வரி செலுத்துவோர் சங்கத்துக்காரங்க, உள்ளாட்சி அமைப்புகளில் நடக்குற வேலைகள் பத்தி ஆய்வு நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கிறதை வழக்கமா வைச்சிருக்காங்க…
“”சிவகாசி நகராட்சியில, சமீபத்துல 50 லட்ச ரூபாய்க்கு நடந்த ரோடு பணிகள் தரமில்லைன்னு, இந்த அமைப்பினர், நகராட்சி நிர்வாக ஆணையர் நிரஞ்சன் மார்டிக்கு புகார் அனுப்பியிருக் காங்க… அதுல, நகராட்சியில நடந்த முறைகேடுகள் பற்றி, புட்டு புட்டு வைச்சிருக்காங்க…
“”இது சம்பந்தமா விசாரிச்சு அறிக்கை கொடுக்க, கண்காணிப்பு பொறியாளர் ரகுநாதனுக்கு நிரஞ்சன் உத்தரவிட்டிருக்காருங்க… விசாரணை நடக்கப்போறதைத் தெரிஞ்சுக்கிட்ட நகராட்சி நிர்வாகம், யாருக் கும் தெரியாம ராவோட ராவா, ரோட்டுல பேட்ச் ஒர்க் பண்ணியிருக்காங்க…
“”தகவல் அறிஞ்ச வரி செலுத்துவோர் சங்கத்துக் காரங்க, அதை போட்டோ எடுக்க வந்துட்டாங்க… கேமராவும் கையுமா ஆளைப் பார்த்ததும், நகராட்சி அதிகாரிகள் பேட்ச் ஒர்க் செய்யாமலே மூட்டைகளை தூக்கிட்டு ஓடியிருக்காங்க… தொடர்ந்து புகார் போறதால, கொஞ்ச நாளைக்கு எந்த ரோடு வேலையும் செய்ய வேண்டாம்னு நிறுத்தி வைச்சிருக் காங்களாம்ங்க…” என ஒரே மூச்சில் முடித்தார் அந்தோணிசாமி.
“”பொதுக்குழு முடிஞ்சதும் ஒரு ரவுண்டு வரப்போறாங்களாம் ஓய்…” என்றார் குப்பண்ணா.
“”எந்தக் கட்சி விவகாரம் பா…” எனக் கேட்டார் அன்வர்பாய்.
“”அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்துல நாளைக்கு கூடறதே ஓய்… அதுக்கப்பறம் நெல்லை, கோவை, சேலம்னு மண்டலம் வாரியா ஒரு ரவுண்டு பிரசாரம் செய்ய ஜெ., முடிவு செஞ்சிருக்காங்களாம் ஓய்…” என்றார் குப்பண்ணா.
“”அம்மா போக்குல மாற்றம் ஏற்படுதுன்னு சொல்லு பா…” என்றார் அன்வர்பாய்.
“”நிச்சயமா… ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க கூப்பிட்டாளாம் ஓய்… மறுநாளே, “நான் வர முடியலை… எனக்குப் பதிலா மதுசூதனன், ஜெயக்குமார், பாலகங்கா, மைத்ரேயனை அனுப்பி வைக்கறேன்’னு தகவல் அனுப்பிட்டாங்களாம்…
“”வழக்கமா இதுமாதிரி கடிதங்கள் அனுப்பினா, கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்குமாம்…
இப்ப உடனுக்குடன் பதில் வர்றதே பெரிய மாற்றம்னு எல்லாரும் ஆச்சர்யப்படறா ஓய்…” என முடித்தார் குப்பண்ணா. பெஞ்ச் எழுந்தது.
ில், கவனி, செல் – பங்குச் சந்தை நிலை இப்படித்தான்
செப்டம்பர் 18,2008,00:00 IST
அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன் தொடர்ந்து வீசிய புயல் காற்று பற்றி, உலகம் கவலைப்பட்டதோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க நிதிச்சந்தையை தாக்கிய சுனாமி தான் உலகம் முழுவதையும் கதி கலங்கச் செய்துள்ளது. அமெரிக்காவின் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான லேமென் பிரதர்ஸ் கம்பெனி திவாலானதால் உலகளவில் சந்தைகள் ஆட்டம் கண்டன என்றே கூறவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் என்ரான், கடந்தாண்டு சிட்டி வங்கி மற்றும் பிய்ர்ஸ் ஸ்டேன்ஸ், இப்போது, லேமென் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், ஏ.ஐ.ஜி., என்று தொடர்ந்து பல அமெரிக்க கம்பெனிகள் உலகை கவலையடைய வைத்துள்ளது. அவற்றில் பல, சீட்டுக்கட்டில் கட்டிய கட்டடம் போல விழவும் செய்தன. உலகின் சிறந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ள நாடான அமெரிக்காவிலேயே இப்படி தொடர்ந்து நடப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான். திங்களன்று வந்த இந்த செய்தியைத் தொடர்ந்து, சந்தை ஒரு சமயத்தில் 800 புள்ளிகளுக்கு மேல் இழந்திருந்தது.
கடந்தாண்டெல்லாம் அடிக்கடி 1,000 புள்ளிகள் ஏறியே பார்த்தவர்களுக்கு, இப்போது அதலபாதாளத்திற்கு இறங்கி வருவது ஜீரணிக்கக்கூடியதாக இல்லை. இந்த சரிவிலும் சிலர் தைரியமாக பங்குகளை வாங்கியதால், சந்தை இழந்த புள்ளியில் சில நூறை திரும்பப் பெற்றது. கடைசியாக 469 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. அடுத்த நாளான செவ்வாயும் மிகவும் இறக்கத்திலேயே துவங்கியது. பலரும் மிகவும் பயப்படத் துவங்கிய வேளையில் சந்தையை காப்பாற்றும் செய்திகளாக வந்து கொண்டிருந்தது.
அதாவது, லேமென் பிரதர்ஸ் மூழ்கியே விட்டது, திவாலாகி விட்டது என்றே நினைத்து கொண்டிருந்த போது பார்ச்லேஸ் வங்கி அதை வாங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்ததும், அமெரிக்காவின் பெட் இன்னும் 0.25 புள்ளிகள் ரேட் கட் செய்யும் என்றும் வந்த செய்திகள் சந்தையை சிறிது நிமிர செய்தது. இருந்தும் அன்றைய தினம் 12 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. நேற்று சந்தை சிறிது உயருமா என்று அனைவரும் காத்திருந்த வேளையில் மறுபடியும் இறக்கத்திலேயே சென்றது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 256 புள்ளிகள் குறைந்து 13,262 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 66 புள்ளிகள் குறைந்து 4,008 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
லேமென் பிரதர்ஸ் – என்ன நடந்தது?: அமெரிக்க வீட்டு அடமானச் சந்தையில் லேமென் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிலச் சொத்து மதிப்பு திடீரென்று குறைந்ததால் லேமென் நிறுவனத்திற்கு இந்த நிலை ஏற்பட்டது. இது தவிர வேறு நாடுகளில் செய்திருந்த முதலீடுகளிலும் பங்குச் சந்தையின் இறக்கங்களால் பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நஷ்டங்கள் கடந்த மார்ச் முதல் பேசப்பட்டு வந்தன. ஆனால், தற்போது தான் உலகறிந்த ஒன்றானது. தற்போது, பார்ச்லேஸ் வங்கி அதை வாங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மெரில் லிஞ்ச் கம்பெனியை பாங்க் ஆப் அமெரிக்கா வாங்கியுள்ளது. அது போல ஏ.ஐ.ஜி., தொடர்ந்து நடத்த அமெரிக்காவின் பெட் உதவியுள்ளது.
அட்வான்ஸ் டாக்ஸ்: கடந்த 15ம் தேதி அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட கடைசி தினம். யார் யார் அதிகம் அட்வான்ஸ் டாக்ஸ் கட்டியுள்ளனர் என்ற விவரம் வெளிவர ஆரம்பித்தால், அது சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
டாலர் எங்கே உள்ளது?: ரூபாய் மதிப்பு ஏன் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிராக கூடி வருகிறது தெரியுமா? ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பை மேலே வைத்திருப்பதற்காக தனது கையிருப்பில் உள்ள டாலர்களை விற்று வருகிறது. இப்படி மூன்றாயிரம் கோடி டாலர் வரை விற்றுள்ளது. ஆதலால், சந்தையில் ரூபாயின் மதிப்பு சரியவில்லை. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ரூபாய் மதிப்பு சரிவு சாதகமாகவே இருந்தாலும், இறக்குமதியாளர்களை தாக்கி விட்டுத்தான் சென்றிருக்கிறது. இதனால் தான் என்னவோ முரளி தியாரோ கச்சா எண்ணெய் பேரலுக்கு 67 டாலர் அளவில் வந்தால் தான் விலை குறைப்பைப் பற்றி யோசிக்க முடியும் என்று கூறுகிறாரோ என்னவோ?
புதிய வெளியீடுகள்: கடந்த வாரம், 20 மைக்ரான் வெளியீடு, சிறிய முதலீட்டாளர் களால் நன்றாக செலுத்தப்பட்டவுடன் எல்லாரும் நினைத்து கொண்டிருந்தது புதிய வெளியீடுகளால் சந்தை இனி ஒளிர்வு பெறும் என்று. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், எல்லா கம்பெனிகளும் தங்களது வெளியீடுகளை ஒத்தித்தான் வைக்கும். வெளியீடுகள் கொண்டு வராது.
இன்றும் நாளையும் எப்படி?: முட்கள் நிறைந்த பாதை தான். அந்தப் பாதையில் நடக்க வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். குப்பைத் தொட்டியில் கூட யோசித்து கையை விடவேண்டிய நேரம் இது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கவனமாக கையாள வேண்டும். நில், கவனி, செல் இது தான் இப்போதைய பங்குச் சந்தையின் போக்கு.